Sat. Nov 23rd, 2024

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, 48 வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

குடிரயசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், என்.வி.ரமணாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட என்.வி.ரமணா வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.

ஓய்வுப்பெற்றுள்ள தலைமை நீதிபதி போப்டே, கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமனம் செய்யலாம் என்று பரிந்துரை செய்தியிருந்தார்.

1957 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள பொன்னவராம் கிராமத்தில் பிறந்த என்.வி.ரமணா, 1983 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். 2000 ஆம் ஆண்டில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி முதல் மே 20 ஆம்தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். பின்னர், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம்தேதி முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றத் தொடங்கினார்.

உச்சநீதிமன்றத் நீதிபதியாக பணியாற்ற காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை அவர் வழங்கியுள்ளார். 2020 ஆம்ஆண்டு முதல் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விலும் இடம் பெற்ற நீதிபதி என்.வி.ரமணா, காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் அமர்விலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

வழக்கறிஞர் பணியை மேற்கொள்வதற்கு முன்பாக, 1970 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில ஆந்திராவில் பிரபலமான ஈநாடு பத்திரிகையிலும் ஊடகவியலாளராக நீதிபதி என்.வி.ரமணா பணியாற்றியுள்ளார்.

தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட என்.வி.ரமணாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

J