Sat. Nov 23rd, 2024

இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு இதோ…..

கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் தேசிய அளவில் திட்டமிடல் போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வருகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதால், இந்தியா முழுவதும் 80 கோடி பயனாளிகளுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

மே&ஜூன் மாதங்களில் இவ்வுதவியை மக்கள் பெறமுடியும். உடனடி நிவாரணமாக இந்த உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கின்ற கொரோனா பாதுகாப்புமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

பிரதமரின் கரிஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.26000 கோடி மதிப்பில் வரும் மே ஜூன் மாதங்களில் இந்தியா முழுவதும் ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இதனால் சுமார் 80 கோடி மக்கள் பயனடைவர் . .

இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.