Tue. May 6th, 2025

மலையாளத்தில் குலூப், சல்யூட், தமிழில் ஹே சினாமிகா என, மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க துவங்கி விட்டார். மகான்டி படத்தை தொடர்ந்து தெலுங்கில் துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது படம் இது.

தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் லெப்டினன்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார்.. அதனாலேயே காஷ்மீரில் இதன் படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.. அதுமட்டுமல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.

கொரோனோ தொற்று பரவல் காரணமாக, படப்பிடிப்பு தளத்தில் கூடுதல் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. மேலு, தீவிரவாதிகள் அச்சமும் அங்கு நிலவி வருவதால், படப்பிடிப்பு நடக்கும் இடங்களை காஷ்மீர் போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.