Sat. Apr 27th, 2024

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய நடிகர் வடிவேலுவுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் எனும் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் நிலையில், சிறந்த நகைச்சுவை நடிகரான நடிகர் வடிவேலு தனது பிறந்தநாள் விழாவை, படக்குழுவினருடன் உற்சாகமாக கொண்டாடினார். இதில், இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பிறந்தநாள் வாழ்த்துகள் முழங்க, கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நடிகர் வடிவேலு. அவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, ஆளுயர ரோஜா பூ மாலையை அணிவித்தும் வாழ்த்து மழை பொழிய, நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி அடைந்தார். நடிகர் வடிவேலுவுக்கு கதாநாயகி கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.