Tue. May 14th, 2024

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் லட்சியத்தை நிறைவேற்றும் மாபெரும் பணியை மேற்கொண்டவர் மறைந்த நடிகர் விவேக். தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடப்பட வேண்டும் என ஆசைப்பட்டார் டாக்டர் அப்துல் கலாம். அவரின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக கூறி, மாநிலம் முழுவதும் மரம் நடும் பணியை ஊக்குவித்தார் நடிகர் விவேக். அதன் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனைப் படைத்த அவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு காலமானார்.

அவரின் வழியில் அவரது கனவை நிறைவேற்ற திரையுலக நட்சத்திரங்கள் சபதம் ஏற்றுள்ளனர். முதல்நபராக, நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஆர்டிகிள் 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட உதயநிதி, படக்குழுவினருடன் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது வழியில் மரக்கன்றையும் நட்டார்.

இரண்டாவது நாளாக இன்று லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனும், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விவேக்கிற்கு மலரஞ்சலி செலுத்தியதுடன்,, 10 மரக்கன்றுகளை நட்டு, அவரது வழியை தொடர்கிறார்.

வி ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மரத்தோடு மாநாடு என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விஜிபி கடற்கரையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நடிகர் சிம்பு, ,இயக்குனர் வெங்கட்பிரபு கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷினி, நகைச்சுவை நடிகர்கள் பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி, சண்டை பயிற்சியாளர் சில்வா, உள்ளிட்டோர் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி நடிகர் விவேக்கிற்கு அஞசலி செலுத்தினர்.

தொடர்ந்து, அதே பகுதியில் .படக்குழுவினருடன் சேர்ந்து பத்து மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு தனது அஞ்சலியை செலுத்தினர், நடிகர் சிம்பு.

நடிகர் விவேக் வழியில் தொடர்ந்து மரங்களை நடுவதில் தான் ஆர்வம் காட்டப்போவதாக கூறிய சிம்பு, தனது வழியில் தனது ரசிகர்களும் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டு விவேக்கின் கனவை நனவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.