மேற்கு வங்க மாநில சட்டமன்றத்திற்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளிவல் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்குச்சாவடிக்கு படையெடுத்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிட்ஹான் நகரில் வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு மோதலாக வெடித்ததையடுத்து, அந்த நகரில் பதற்றம் நிலவியது.
வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர். இதனையடுத்து, அங்குஅமைதி திரும்பியது. இருப்பினும்,இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
45 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 11 மணியளவில் 21,26 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 45 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே களத்தில் உள்ள நிலையில், ஆளும் திரிணாமுல காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போடடியிடுகின்றன.
தேர்தலையொட்டி, 45 தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.