Sun. May 11th, 2025

தமிழகத்தில் நேற்றை போலவே இன்றும் கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 7987 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் மேலும் 2,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 29 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சிசிக்சை முடிந்து இன்று மட்டும் 4,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக காதாரத்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்றைய பாதிப்புடன் சேர்ந்து மொத்தம் 9 லட்சத்து 62 ஆயிரத்து 935
பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
2 லட்சத்து 74 ஆயிரத்து 734 பேராக உயர்ந்தள்ளது.


குணமடைந்து இன்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,176 ஆகவுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனோ தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,91,839 ஆக உள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 12,999 ஆக உள்ளது.

மாவட்டங்கள் வாரியாக பாதிக்கப்பட்டுள்ளோரின் விவரம் இதோ….