ரோஜா எனும் பைத்தியகார சீரியல் சன் டிவியில் prime timeயில் ஓடுகிறது. பல மூடநம்பிகைகளை தொடர்ந்து சீரியல்கள் சொல்லி வரும் நிலையில் இந்தச் சீரியல் இருப்பதிலே அதீத சகிக்க முடியாத தண்டனைக்குறிய மூட நம்பிகைகளை தற்போது காட்சிகளாக செய்து வருகிறார்கள். உண்மையில் இவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
சென்ற வாரம், நெருப்பில் பெண்கள் உட்காந்து பூஜை செய்து தங்களது உண்மைத் தன்மையை நிருபித்துக் காட்ட வேண்டும்.
எப்படி இராமாயணத்தில் கற்பை சோதித்தார்களோ; இதில் இந்த அப்பா-அம்மாவிற்கு பிறந்தவர்கள் தாங்கள் தான் நாயகியும் வில்லியும் நிருபிக்க இப்படி ஒரு அக்னி யாக சோதனை.
இந்தக் காட்சிகளை குடும்பத்தோடு பார்க்கும் சூழல் தான் எல்லோரது வீட்டிலும் இருக்கிறது. பெரியர்வக்ளாகிய நாம் இதனை வெறும் நாடக காட்சிகளாக கடந்திடலாம். ஆனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியே.
சமீபத்தில்; ஆந்திராவில் நடந்த நரபலி ஆகட்டும், சென்ற கிரகணத்தின் போது கர்நாடகத்ட்தில் ஊனமுற்ற குழந்தைகளை மண்ணுக்கு புதைத்த நிகழ்வாக இருக்கட்டும் எல்லாமே மூட நம்பிகையின் வெவ்வேறு நிகழ்வாகும். இதெல்லாம் ஒரே நாளில் நடந்துவிட்ட முட்டாள் தனமான விசயம் இல்லை. தொடர்ந்து முட்டாள் தனத்தை நம்பிகையின் பெயரால் நம்முள் விதைத்த காட்சிகளும் கதைகளும் தான் இதற்கு காரணம்,
மண்ணுக்குள் புதைத்தவர்களையும், நரபலி செய்தவர்களையும் கைது செய்ததுப் போலவே இதுப் போன்ற காட்சிகளுக்கு தீவிர தனிக்கைகள் செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மக்களை ஒருவித மூடநம்பிகை போதையில் வைச்சிருப்பதை அனைத்து சானல்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல்; வெறும் பரப்பரப்புக்காக இவர்கள் செய்யும் கொடுமைகள் அடுத்த தலைமுறையை மிகப்பெரிய அளவில் பாதிக்கப் போகிறது.
— courtesy Facebook