Sat. Nov 23rd, 2024

பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்வதை மத்திய அரசு கைவிட்டதால், மத்திய அரசின் உணவுக் கிடங்குகளை மூடிகிடக்கின்றன. இதனை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள கிடங்குகளை முற்றுகையிட்டு தேசிய அளவிலான போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுக்க வேண்டும் என அம்மாநில விவசாயிகள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரு மாநில விவசாயிகளின் கோரிக்கைக்கு இந்தியா முழுவதிலும் ஆதரவு பெருகி வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் உணவுக் கிடங்குகள் முன்பு போராட்டம் நடத்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக சட்டமன்றத்திற்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், அடையாளப் போராட்டத்தை அந்தஅமைப்பு முன்னெடுத்துள்ளது.

மன்னார்குடி அருகே இருக்கிற பாமணி மத்திய தானியக் கிடங்கை முற்றுகையிடுவதற்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் மன்னார்குடி பந்தலடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ததுடன், அங்கேயே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பிஆர் பாண்டியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விவசாயிகளுக்கு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் 3 வேளாண் விரோத சட்டங்களை உலகப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவந்து விவசாயிகளை அன்னிய பெரு முதலாளிகளிடம் அடிமைப்படுத்தி விட்டது. கடந்த ஒரு வாரகாலமாக பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் ரபி பருவ அறுவடை தீவிரமடைந்து உள்ளது.மதிய உணவு கழகம் தனது கொள்முதலை நிறுத்தி கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டது. தனியாரிடம் விற்றுக் கொள்ளுங்கள் என்று தட்டிக் கழிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசினுடைய துரோகம் வெளிப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறது. எனவே இந்த சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் அந்நிய முதலாளிகளிடம் அடிமைப்பட்டு போவார்கள், சம்பத் கை திரும்ப பெற வேண்டும் என்று போராடும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது.இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் ஆட்சியும் முழு துணை போகிறது.

இந்நிலையில் தற்போது மோடி அரசு கொள்முதலை கைவிட்டதன் மூலம் மத்திய அரசின் துரோகம் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. எனவே வேளாண் விரோத சட்டங்களை விவசாயிகள் மீது திணிக்க முயற்சிக்கும் பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சிக்கும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

எதிர்காலத்தில் தமிழகத்திலும் மத்திய அரசு கொள்முதலை கைவிடும் நிலை ஏற்பட்டு இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
எனவே தமிழக விவசாயிகள் ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் வாக்குகள் மூலமாக மோடி அரசுக்கும் எடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் விவசாயிகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
சட்டத்தை திரும்பப் பெறும் வரையிலும் விவசாயிகள் போராட்டம் ஓயாது.

இவ்வாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முற்றுகைப் போராட்டம் மற்றும் மறியலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மாநிலத் தலைவர்
த புண்ணியமூர்த்தி கௌரவத் தலைவர் நீலன் அசோகன் மாநிலத் துணைச் செயலாளர்
எம் செந்தில்குமார் திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன் தஞ்சை மாவட்ட செயலாளர் எம் மணி மாவட்ட தலைவர் துரை பாஸ்கரன் வடக்கு மாவட்ட செயலாளர் பாஷா ரவி,நாகை மாவட்ட துணை செயலாளர் திருமருகள் சேகர்,மன்னார்குடி ஒன்றிய செயலாளர் பி கே.கோவிந்தராஜ் தலைவர் பைங்கை ராஜ்குமார்,நகர தலைவர் தங்கமணி, செயலாளர் போஸ் உயர்மட்ட குழு உறுப்பினர் ஞானசேகரன், உள்ளிட்ட அனைத்து ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.