சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தீவிரவாதத்தை எதிர்த்து தைரியமாக போராடி உயிர்தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மக்களின் ஆதிக்கத்தில் உள்ள பிஜாபுர் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல நேற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படையினர் மீது அடர்ந்து வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்கல் நடத்தினர். பதிலுக்கு எல்லைப்பாதுகாப்புப்டையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருவரிடையேயும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் வீரமரணமடைந்தனர். படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரமரணமடைந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் நாடு மறக்காது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணமடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீர வணக்கம். அவர்கள் மிகுந்த தைரியத்துடன் போராடினார்கள், அவர்களின் தியாகத்தை ஒருபோதும் நாடு மறக்க முடியாது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
.