Sun. May 5th, 2024

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பிரியாணி , மதுப் பானங்களுக்கு வாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுபானக் கடை அதிகரிப்பு தொடர்பாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்விகள் எழுப்பியுள்ளது.

வாக்குகளை விற்பனை செய்துவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை, மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

வாசுதேவநல்லூர் தொகுதியை, பொது தொகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று விசாரித்தது…அப்போது கேள்வி மேல் கேள்வி கேட்டு அரசு தரப்பு வழக்கறிஞரை திணறடித்தனர்….

பிரியாணி , மது பானங்களுக்காக வாக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இலவச திட்டங்களை நிறைவேற்றுவதால் மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது.

நிதிச்சுமையை சமாளிக்க மதுக்கடைகள் அதிகரிக்கப்படுவதாக காரணம் காட்டப்படுகின்றன

தமிழகத்தின் கடன் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருவதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும்.

மக்களை சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது ?

சமூக நலத்திட்டங்கள் எனும் பெயரில் மக்களை சோம்பேறியாக்கும் திட்டங்களை அறிவிக்கப்படுகின்றன.

தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் முறையாக வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா ?

இப்படி பல்வேறு கேள்விகளை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.