Sun. May 19th, 2024

சட்டமன்றத்திற்கு வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை, மாநிலம் முழுவதும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் நகரின் ஒருபகுதியில் உள்ள பெரியார் நகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் மடக்கு சோதனையிட்டனர். அதில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே, திருச்சி மாவடடம் மணப்பாறை எம்.எல்.ஏ. சந்திரசேகர் வீட்டிலும், அவரது டிரைவர் வீட்டிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இரண்டு பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ.ஓட்டுனரின் வீட்டில் சோதனையிட்டபோது, அங்கிருந்த வைக்கோல் போரில் ஒரு கோடி ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். .