Sun. May 19th, 2024

புதுமுக இயக்குனர் புச்சிபாபு சனாவின் கைவண்ணத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலக்கிய தெலுங்கு சினிமா ‘உப்பெனா’. கொரோனோ அச்சுறுத்தல் இருக்கும் இந்த காலத்தில் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரி கொட்டியது. படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படம் மூலம் நல்ல லாபத்தைச் சம்பாதித்தது.

தெலுங்குத் திரையுலகம் பாராட்டிய இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனரான புச்சிபாபுவுக்கு 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்1 காரை பரிசாக வழங்கியது தயாரிப்பு நிறுவனம். தன்னுடைய புதிய காரில் தன்னுடைய குருநாதர் இயக்குனர் சுகுமாரை உட்கார வைத்து முதல் ரவுண்டு சென்றார் புச்சிபாபு.

இயக்குனர் புச்சிபாபுவைத் தேடி தற்போது பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தின் நாயகி கிரித்தி ஏற்கெனவே சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். விஜய் சேதுபதிக்கும் பல தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகின்றன.

‘உப்பெனா’ படத்தின் வெற்றி தெலுங்குத் திரையுலகத்திற்கு புத்துணர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் கருதுகிறார்கள்.