Mon. May 6th, 2024

உலகளவில் பிரம்மாண்டமான திருத்தேர் என்று புகழுக்குரியது, திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் தேராகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறு ஆழித்தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.

குறவர்கள் போற்றிய சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோயில் போற்றப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திர தினமான இன்று ஆழித்திருத்தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது.

விழாவினையொட்டி நேற்று மாலை ஆழித் தேரில் உற்சவர் தியாகராஜர்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, இன்று அதிகாலை காலை உற்சவர்கள் விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அணிவகுக்க, காலை 7:30 மணியளவில் ஆழித்தேர் அசைந்தாட,ஐந்தெழுத்து மந்திரங்களை விண்ணதிர முழங்கிய பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர். மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த திருத்தேரை, பக்தி பரவசத்துடன் தரிசித்து, ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து ஆனந்த கூத்தாடினார்கள் பக்தர்கள்.

கடந்த ஆண்டு கொரோனோ தொற்று பரவல் காரணமாக, திருத்தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்தாண்டு அற்பத காட்சியை காண முடியாத ஏக்கத்தில் இருந்த தமிழக பக்தர்கள், இந்தாண்டு ஒருமித்த பக்தியுணர்வோடு பொங்கும் கடல் அலைபோல, திருவாரூர் வீதிகல் எங்கும் திருத்தேரோட்ட வைபத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனையொட்டி திரும்பி திசையெங்கும் திருவிழாக் கூட்டம் போல பக்தர்கள் நிரம்பி இருந்தனர்.