Sat. May 18th, 2024

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் 6 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் கொடி அணிவகுப்பு தொடர்ந்து நடைபற்று வருகிறது.

தமிழகத்தில் பதற்றமான பகுதிகளில் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் கூடுதல் பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவ ப்படையைச் சேர்ந்த வீரர்களும் ரோந்துப் பணியில் ஈடுபடடு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 330 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

முதற்கட்டமாக, 65 கம்பெனி துணை ராணுவ படை தமிழகம் வந்திருக்கிறது. பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பதற்றமாக உள்ள பகுதிகளில் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் அச்சமின்றி மக்கள் வாக்களிப்பதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.