Fri. Nov 22nd, 2024

வீட்டு வேலைக்கு வந்தவர்கள், வீட்டு உரிமையாளரை தாக்கிவிட்டு, நகை மற்றும் பத்தாயிரம் ரூபாயை திருடிச் சென்றுவிட்டனர் என்ற புகாரைப் பார்த்த மாதவரம் போலீசார் வழக்கமான புகாரில் இதுவும் ஒன்றுதான் என்று விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையின்போது கிடைத்த தகவல்கள்தான், போலீசாரையை அதிர்ச்சியடைய வைத்தது.

வேலையில்லாமல் சாப்பாட்டிற்காக கஷ்டப்படுகிறார்கள் இளம்தம்பதிகள் என்பதை கேள்விப்பட்டு பரிதாபப்பட்டிருக்கின்றனர், தணிக்காசலம் நகரில் வசிக்கும் 52 வயதான ரவி மற்றும் 47 வயதான கலைவாணி தம்பதியினர். இவரது மகன் புனோவில் பணியாற்றி வருவதால், தங்களுக்கும் ஒத்தாசையாக இருப்பார்கள் என்று நம்பி, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ராகேஷ், ரோவி இளம்தம்பதியினரை தங்கள் வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர்.

இளம்ஜோடி என்பதால், அவர்கள் மீது ரவிக்கும் கலைவாணிக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அவர்கள் இருவரிடமும் நன்றாக பழகியும் உள்ளனர். ஆனால், அந்த இளம்ஜோடி, சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறது. அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதை உணராமல், அளவுக்கு அதிகமாக பாசமும் காட்டியிருக்கிறார் கலைவாணி. அண்மையில் கலைவாணி மட்டும் வீட்டில் இருப்பதை அறிந்துகொண்ட ராஜேஷ் ரேவதி ஜோடி, அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 30 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு கம்பி நீட்டிவிட்டனர். அவர்கள் தாக்குதலில் படுகாயமடைந்த கலைவாணி உயிரிழந்துவிட்டார்.

தகவலின்பேரில் விரைந்து வந்த மாதவரம் போலீசார், விசாரணை நடத்தியதுடன், துரிதமாக செயல்பட்டு, பூந்தமல்லியில் பதுங்கியிருந்த ராகேஷ் மற்றும் ரேவதி ஜோடியை அதிடியாக கைது செய்து, நகைகையும், 10 ஆயீரம் ரூபாயையும் கைப்பற்றி, சிறையில் அடைத்தனர். திருட்டு நிகழ்வு நடந்த 24 மணிநேரத்திற்குள்ளாக, தப்பியோடிய இளம்குற்றவாளிகளை கைது செய்த மாதவரம் போலீஸாரை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்.


தனியாக இருக்கும் தம்பதியினரே யாரையும் எளிதாக நம்பிவிடாதீர்

https://www.facebook.com/watch/?v=892544031289638