Mon. May 6th, 2024
விஜய் டிவியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்ட்ட பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல் கல் என்று புகழப்படுவது உண்டு. பாகுபலி போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையாக, இந்தியாவின் முன்னணி மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி, அனைத்துரப்பு மக்களையும், குறிப்பாக பெண்களை கோடிக்கணக்கில் ஈர்த்தது. 
தமிழில் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு தொடக்கம் முதலே கமல்ஹாசன்தான், தொகுந்து வழங்கும் ஸ்டாராக இருந்து வருகிறார். அவரின் குணாதிசயங்கள், பங்கேற்பாளர்களின் ரசனைகள், பின்னணி என அனைத்து தகவல்ககளையும் சரியான நேரத்தில் வெளிப்படுத்தி, பிக்பாஸ் ரசிகர்களை மட்டுமின்றி பங்கேற்பாளர்களையும் சொக்க வைத்தவர் கமல்ஹாசன். 
 
70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலும், சகலகலாவல்லவனான அவர் மீது பெண்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பு, அதை மயக்கம் என்றுகூட வர்ணிக்கிறார்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். 

முதல் ஷோவிற்கு 25-35, இரண்டாவது ஷோவுக்கு 35-50, மூன்றாவது ஷோவுக்கு 50-75 என கோடிகளில் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு நான்காவது ரியாலிட்டி ஷோவுக்கு 75-100 என கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டதாக ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் இப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் 4 வது ஷோ முடிந்துவிட்ட நிலையில், கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தில் பிஸியாக இருக்கிறார். 5 வது ரியாலிட்டி ஷோவுக்கும் கமல்ஹாசனே தொகுப்பாளராக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆமாம், கமல்ஹாசன், எலிமினேஷன் ஆகிவிட்டார். அவருக்குப் பதிலாக இளம்புயல் சிம்பு என்கிற சிலம்பரசனை ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  

கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருப்பதாலும், தப்பித்தவறி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றுவிட்டாலும் ரியாலிட்டி ஷோவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என விஜய் டிவி நிர்வாகம் கருதுகிறதாம். 

இந்த அடிப்படையில், கமல்ஹாசனை விட இளம்தலைமுறையினரிடம், குறிப்பாக கல்லூரி மாணவிகளிடம் சிம்பு மீது ஒரு கிரேஸ் இருக்கிறது. சிம்புவின் அதிரடியும், அட்டகாசமான ஸ்டைலும் வெளிப்படையாக பேசும் அவரது குணமும், யாராக இருந்தாலும் அடித்து தூக்கும் தில்லும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெறும் என்று நம்புகிறதாம் விஜய் டிவி நிர்வாகம். அதனால், எந்த விலை கொடுத்தாவது சிம்புபை ஒப்பந்தம் செய்ய தயாராகிவிட்டதாம் பிக் பாஸ் ஷோவின் உரிமையாளர் தரப்பு. 
மாணவிகள், மாணவர்களிடம் அல்லுசில்லு அளவுக்கு ஆதரவு பெற்றுள்ள சிலம்பரசன், பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவுக்கு தொகுப்பாளராக பங்கேற்க சம்மதம் தெரிவித்துவிட்டால் போதும், பிக் பாஸ் 5 புதிய உச்சத்தை தொடும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறதாம் விஜய் டிவி நிர்வாகம். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிம்பு தோன்றுவார் என்பது விளம்பரமானாலே, தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் உள்ள இளம்கதாநாயகிகள் கூட, ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க உற்சாகமாக வருவார்கள் என்பதால், பிக் பாஸ் சீசன் 5 புதிய உச்சத்தையும் வசூலையும், விளம்பரங்களையும் வாரி குவிக்கும் ஆசையல்ல, பேராசை படுகிறதாம் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தயாரிப்பு டீம்.  

ஆக மொத்தத்தில் பிக் பாஸ் சீசன் 5 க்கு சிம்பு தொகுப்பாரளாக ஒப்பந்தம் செய்யப்பட்டால், ஜாலி, கிண்டல், கேலி என ஒவ்வொரு ஷோவும் பிச்சுக்கிட்டு போகும் என்று உறுதியாக நம்புகிறார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். 


சிம்பு தற்போது வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. மேலும், நதிகளில் நீராடும் சூரியன் உள்ளிட்ட சில படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். பிஸியான ஷெட்டூலில் சிம்பு இருப்பதால், அவரது கால்ஷீட் கிடைப்பதை பொறுத்து, பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோ தொடங்குவது தொடர்பான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என விஜய் டிவி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

கமல்ஹாசனுக்கு வயசாயிடுச்சி தூக்கி வெளியே போடுங்க.. ன்னு பொதுமக்கள் சொல்வதற்கு முன்பாக விஜய் டிவி நிர்வாகம் முழித்துக் கொண்டு புத்திசாலிதனமாக சிம்புவை ஒப்பந்தம் செய்ய முனைப்பு காட்டுவது, காட்சி ஊடகத்தை லாபநோக்கில் கொண்டு செல்வதுதான் வியாபார தந்திரம் என்பதை மூலதனமாக கொண்டுள்ள விஜய் டிவிக்கே உரிய தொழில் யுக்தி. அதில் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. 

கோடிகளில் பணம் வைத்திருக்கிறவன் தேர்தலில் போட்டியிடுகிறான்..வேறு என்னத்த சொல்ல...