Tue. May 7th, 2024

20.3.2021. நதிகளிலே நீராடும் சூரியன். கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், வேல்ஸ் திரைநிறுவனத்தின் தயாரிப்பில், சிம்பு நடிக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்கான பாடல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன் ?. அருமையான பாடலோடு தொடங்கியிருக்கிறோம் ?. போன மாதமே கௌதம் அறிவிப்பு செய்தும் முகநூலில் என்னால் பதிவிட முடியாது போயிற்று. பின்மாலை தொடங்கி இரவு முழுக்க ஒலிக்கூடத்தில் இருக்கிறேன். இரவு வேலை செய்வது என்பது எனக்கொன்றும் புதிதில்லை. அதுதான் எனக்கு இயல்பாக இருக்கிறது. ஆனால் அதிகாலை வீடு திரும்பி, சமரன் படிப்பு, கல்லூரிக்கு அனுப்புதல், வீடு தொடர்பான பணிகள், கொஞ்சம் தூக்கம் என்று இன்னொரு அத்தியாயத்தையும் நிகழ்த்துவதுதான் சிரமமாக உள்ளது.

இல்லத்தரசிகளுக்கு நம் தேர்தல் கட்சிகள் உழைப்பூதியம் தருகிறார்களாமே, வெளியிலும் உழைத்து வீட்டிலும் உழைக்கும் பெண்ணரசிகளுக்கு ஏதேனும் உண்டா ?? ?. நகைச்சுவை ஒருபுறமிருக்க, இந்த இல்லத்தரசிகளின் உழைப்பூதியம் குறித்தே தனியாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு பதிவில் செய்யலாம். எனக்குக் கிடைக்கும் கொஞ்சூண்டு நேரத்தில் தேர்தல் அதகளத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ?. இப்போது பாடல்பணிக்கு சிறு இடைவெளி கிடைத்தது. மீண்டும் அடுத்த வாரம் தொடர்வோம் என்று நினைக்கிறேன் ?. ஏதாவது செய்தி இருந்தால் பகிர்கிறேன்.