Fri. Nov 22nd, 2024

சென்னையில் புகழ் பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள், தனது நிறுவனத்திற்கான விளம்பரப் படங்களில் பிரபல நடிகைகள் தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் ஆட்டம் போட்டார். அதனைத்தொடர்ந்து, வெள்ளித்திரையிலும் கலக்க வருகிறார் லெஜன்ட் சரவணனாக புது அவதாரம் எடுக்கிறார். உல்லாசம் படத்தை இயக்க ஜே.டி ஜெரி ஜோடி, அருள் கதாநாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தை இயக்கி வருகின்றனர். கொரோனோவுக்கு முன்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட பாடல் உள்ளிட்ட திரைப்படக் காட்சிகள், திருப்தியாக வந்திருப்பதால், மீண்டும் படப்பிடிப்பு எப்போது என்று காத்திருந்தார் அருள்.

கொரோனோவுக்கு முன்பு ஒரே ஒரு பாடலுக்காக மட்டும் 10 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். பணம் எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை, படம் சூப்பராக இருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயார் என்று கூறிவிட்டாராம் சரவணா ஸ்டோர் முதலாளி அருள்.

தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும், பாடல்காட்சிகள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலு மணாலியில் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர் படக்குழுவினர். பாடல் காட்சி என்றாலே சரவணா ஸ்டோர் முதலாளி துள்ளி, துள்ளி குதிக்கிறாராம். ஹிந்தி மாடல் ரித்திகா திவாரி கதாநாயகியாக நடிக்கிறாராம்.

நல்ல குதிக்கச் சொல்லுங்க.. அப்பவாவது கதாநாயகி உயரத்திற்கு வருகிறாரா என்று பார்க்கலாம் என்று கேலிப் பேச்சும் படக்குழுவினரிடம் எழுகிறதாம்.