Sat. Apr 19th, 2025

அயோத்தி: சீதா பிராட்டி சிறைபிடிக்க பட்டதாக கருதப்படும் சீதா எலியா என்ற இடம் இலங்கை மத்திய மாகாணத்தில் இருக்கிறது. இந்த இடத்தில இருந்து ஒரு கல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் மிலிண்டா மொரோகோடாவினால் இந்த கல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சீதா எலியாவில் சீதா தேவிக்காக ஒரு கோயில் உள்ளது.இந்த இடத்தில் தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

இதுகுறித்து இலங்கை இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இலங்கையில் உள்ள சீதா எலியா கல் இந்தியா-இலங்கை உறவுகளுக்கு பலம் சேர்க்கும் தூண்களாக இருக்கும்.