Sat. Nov 23rd, 2024

அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த தனது மனுவை அ.ம.மு .க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வா பாஸ் பெற்றார். இதேபோல் தன்னை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது செல்லாது என்று தாக்கல் செய்த மனுவை சசிகலா வாபஸ் பெறவில்லை” 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அ.தி. மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பதில் மனு தாக்கல் செய்தனர். 

அண்ணா தி.மு.கவில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக மாற்றங்களையும், பொது குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால் இந்த மனுக்களை தாக்கல் செய்ய தினகரன், சசிகலா ஆகிய இருவருக்கும் உரிமை இல்லை என்று ஓ.பி.எஸ்சும், இ.பி-எஸ்சும் தெரிவித்துள்ளனர்.

 இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9 ந் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.