சென்னை சட்டமன்றத் தொதிகளில் உள்ள வாக்கு சாவடிகள் அங்கு பயப்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளை அடையாளம் கண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது குறித்து, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச் சாவடிகள் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகங்கள், மத்திய துணை ராணுவ படை தங்குமிடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவிக நகர் அம்பேத்கர் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிகள் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகங்களின் உரிய பாதுகாப்பு குறித்தும் மற்றும் தேர்தல் சார்ந்த நடவடிக்கைகள் எடுத்து வரும் அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் காவல்ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
பிறந்தநாள் விடுமுறை…. காவல் ஆணையர் வாழ்த்துச் செய்தி….
இதனிடையே, சென்னை பெருநகர காவல், நுண்ணறிவுப்பிரிவு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் காவல் ஆய்வவாளர் இ.விஜயாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவருக்கு விடுப்பு அனுமதியை துணை ஆணையாளர் .S.விமலா வழங்கினார். மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையரின் பிறந்த நாள் வாழ்த்து மடலையும் நேரில் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வின்போது உடனிருந்த துணை ஆணையர் ஸரீதர்பாபுவும விஜயாவுக்கு பிறந்தநாளை தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
இதேபோல், இன்று15.3.2021 பிறந்தநாள் காணும் சென்னை ஆணையராக மக்கள் தொடர்பு அலுவலக உதவி ஆய்வாளர். S.ராமுவுக்கு ஆணையரின் பிறந்தநாள் வாழ்த்து அட்டையை மக்கள் தொடர்பு உதவி ஆணையர் நேரில் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் குடும்பத்துடன் கொண்டாடிட விடுப்பு அனுமதி வழங்கினார்.