தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதித நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஆங்கில தொலைக்காட்சி ஊடகமான கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது ஆளும்கட்சியாக உள்ள அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 65 இடங்களில் மட்டும் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் தலைமையிலான மக்கள் நீதி மையம் 5 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 3 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதேபோன்ற கருத்துக் கணிப்புகளை புதுச்சேரி மாநில தேர்தல் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் 18 இடங்களில்ல பாஜக கூட்டணி வெற்றிப் பெற்று, அம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு மூலம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.