Fri. Apr 18th, 2025

ஆண்டு தோறும் மாசி மாதம் பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் பிரசித்தம் பெற்றது..அதன் படி நேற்று கருட சேவை விழா களைகட்டியது..

கருட வாகனத்தில் உற்சவம் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..

இன்று அதிகாலை சூரிய பிரபை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் நான் கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..

கடந்தாண்டு கொரோனோ தொற்றின் காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது..அதனால் வருத்தத்தில் இருந்த பக்தர்கள் நேற்றும் இன்றும் கண் குளிர, ஆசை தீர தரிசித்து ஆனந்தம் அடைந்தனர்…