Thu. Nov 21st, 2024


புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி நிச்சயம் அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒருநாள் சுற்றுப்பயணமாக தமிழகம், புதுச்சேரி வந்துள்ளார். நேற்றிரவு சென்னை வந்த அவரை,இன்று காலை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து, அதிமுகவுடனான தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் அவர் புதுச்சேரி மாநிலத்திற்கு புறப்பட்டார்.
காரைக்காலில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

புதுச்சேரியில் மட்டுமல்ல நாடு முழுவதும் காங்கிரஸ் காணாமல் போகப் போகிறது. மத்திய அரசின் திட்டங்களை நாராயணசாமி, புதுச்சேரியில் முழுமையாக அமல்படுத்தவில்லை. வரும் தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றிப் பெற்று, புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறினார்.

மாலையில் விழுப்புரத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கிறார்.