Fri. Nov 22nd, 2024

பிரதமர் மோடி, ஒருநாள் அரசு முறைப்பயணமாக டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்ற அவரை, துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் ஆந்திர ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், ஜிப்மர் மமருத்துவமனையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம்-நாகை இடையே 4 வழிச்சாலை பணி

காரைக்காலில் ரூ 491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி,

புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களால் சாலைப் போக்குவரத்து வசதிகள் மேம்படும் என்றும் திருநள்ளாறு, வேளாங்கண்ணி, நாகூர் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வர பொதுமக்களுக்கு உதவும் சாலைகளின் பணி விரைவாக முடிக்கப்படும் என்றும் கூறினார்.

சாலைகள் மேம்பாட்டின் மூலம் தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருகும் என்று கூறி, கேடில் விழுச்செல்வம் திருக்குறளை மேற்கோள்காட்டியும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும், புதுச்சேரி அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். சாகர் மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார். .

பின்னர் லாஸ்பேட்டையில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பரப்புரை கூட்டததில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசு வழங்கியி நிதிகளை, காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு முறையாக செலவிடவில்லை என்று குற்றம் சாட்டினார்.