Fri. Nov 22nd, 2024

கொரோனோ தொற்று பரவலின் காரணமாக, பள்ளிக்கூடங்கள் திறந்து வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தால், 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் மிகுந்த வரவேற்பை வரவேற்பு பெற்றுள்ளது.

சட்டப்பேரவை இன்று கூடியதுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110 ன் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

2020 21 ம் ஆண்டிற்கான கல்வியாண்டில், கொரோனோ தொற்றின் காரணமாக பள்ளிக் கூடங்களுக் முழுமையாக திறக்க முடியவில்லை. இதனால், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் கற்க முடியாத நிலை ஏற்பட்டது. இணைய வழியாக மட்டுமே கல்வி கற்று வந்தனர். இதனால், அவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் சிரமம் இருந்தது. இதன் காரணமாக, 9,10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை முன்னிட்டு அவர்கள் நேரடியாக அடுத்த வகுப்பிற்கு செல்லும் வகையில் பொதுத் தேர்வு ரத்து செய்ய்பபடுகிறது.ஆண்டுத் தேர்வின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.