Sun. May 19th, 2024

கொரோனோ தொற்றின் அச்சம் நீங்கியதையடுத்து, தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களான கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட மலை வாஸஸ்தலங்களுக்கு வரும் வெளிமாநில பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் மார்ச் மாதம் முதல் கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், மலை வாசஸ்தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கொரோனோ நோய் பரவவுதல் தொடர்பான நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கையுடன் செய்லபட்டு வருகின்றன.

அந்த வகையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகள், மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே, நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப் படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

கேரளாவில் இருந்து வரும் பொதுமக்களும் இந்த கட்டுப்பாடு முழுமையாக பொருந்தும். கொரோனா சான்றிதழுதடன் இ – ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதும் கட்டாயம்.

இவ்வாறு இன்னசென்ட் திவ்யா கூறினார்.

முன்னதாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக, 1098 என்ற இலவச தொலைபேசி சேவையை, உதகை பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தொடங்கி வைத்தார்.