Fri. Apr 11th, 2025

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, மாலை 6 மணியளவில், ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டர்களும் தத்தம் இல்லத்தில் விளக்கு ஏற்றி, உயிர்மூச்சு உள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான நம் இயக்கத்தையும் காப்பேன். இது மாண்புமிகு அம்மா மீது ஆணை என்ற உறுதிமொழியை ஒவ்வொரு அ.தி.மு.க.தொண்டர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அண்மையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகியோர் கூட்டாக விடுத்திருந்த அறிக்கையில் வலியுறுத்தி இருந்தனர்.

அதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்ல அலுவலக முகாமில், தீபம் ஏற்றி, மனைவி, மகனுடன் இணைந்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதேபோல, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும், தொண்டர்களுடன் இணைந்து தீபம் ஏற்றி உறுதி மொழி ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் இதோ….