கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக தமிழகம், கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய நிபுணர் குழு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
கொரோனா தடுப்பு உள்ளிட்ட பொது சுகாதார விவகாரங்களில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உதவ உயர்மட்ட பன்னோக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.
தமிழகம், கேரளம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் இந்த குழுவினர் செல்வார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், RT-PCR சோதனைகளை அதிகப்படுத்தி, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.