Sat. Apr 19th, 2025

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி அனுமதி அளித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ் வழியில் 500 மாணவர்களும், ஆங்கில வழியில் 500 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர்.

பி.எட் படிப்புக்கான வகுப்புகள் மே மாதம் தொடங்கும் என திறந்தநிலை பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது.