Mon. May 6th, 2024

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெடை தாக்கல் செய்தார்,நிதியமைச்சர் பன்னீர்செல்வம்.. அதன் விபரம்-

சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ₹19,420 கோடி ஒதுக்கீடு..

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹6683 கோடி ஒதுக்கீடு .

தமிழகத்தில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் .

தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்

நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்

அதிமுக ஆட்சியில் கடன்தொகை அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டி திமுக வெளிநடப்பு செய்தது…