கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகிகளை கைது செய்ய கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தில் 5 ஆம் நாளான இன்று வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதில் காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்கள் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்
போலீசாரின் பாதுகாப்பு தடுப்புகளை தகர்த்தெறிந்துவிட்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், வகுப்பறைகளை சூறையாடியதுடன் பள்ளி பேருந்துகளை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். வன்முறையை கட்டுக் குள் கொண்டு வர முனைப்பான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வரும் நேரத்தில் காவல் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்களுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் வன்முறை நிகழ்ந்த இடத்தில் குவிந்து, போராட்டக்காரர்களை விரட்டியடித்து அமைதி திரும்ப கடுமையாக போராடி வருகிறார்கள்.
தலைவர்கள் கண்டனம்…
பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற வரலாறு காணாத போராட்டத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே பதற்றம் நிலவி வரும் நேரத்தில், கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி வன்முறை நிகழ்வுகளுக்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கே.அண்ணாமலை
உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும்
@BJP4TamilNadu இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.
ஆட்சியர் விளக்கம்….
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாணவியின் மரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்…