இபிஎஸ்ஸுக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை ஓபிஎஸ் ஏற்க மறுப்பது ஏன்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் 74 பேரில் 64 பேர் தலைமைக் கழக கூட்டத்தில் கலந்துகொண்டனர். 6 பேர் கூட்டத்திற்கு வர முடியாத சூழ்நிலையை விளக்கி கடிதம் கொடுத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் 66 பேரில் 63 பேர் எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக ஆதரிக்கிறார்கள். அதேபோல 75 மாவட்டச் செயலாளர்களில் 70 மாவட்டச் செயலாளர்கள் இபிஎஸ்ஸை ஆதரிக்கிறார்கள். மேலும் கட்சியின் உயிர்நாடியான பொதுக்குழு உறுப்பினர்களில் மொத்தம் உள்ள 2665 பேரில் 2582 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக ஆதரிக்கிறார்கள். இதை ஓ.பன்னீர்செல்வம் ஏன் ஏற்க மறுக்கிறார். ஒட்டுமொத்தமாக அதிமுக இபிஎஸ்ஸை ஆதரிப்பதால், அதனை ஏற்றுக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.