Fri. Apr 4th, 2025

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆங்கில நாளிதழின் கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் மாதவன் உத்தரகாண்டில் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு தமிழக பத்திரிகையாளர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் சிறப்பு நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து கார்த்திக் மாதவன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ…..