காவல், தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு சட்டப்பேரவையில் இன்று பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 78 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
3000 புதிய காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.
காவல்துறையினருக்கு இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ₹30 லட்சத்தில் இருந்து ₹60 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆளில்லா விமான அலகு காவல்படை பிரிவு ₹1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க “பருந்து” என்ற செயலி ₹33 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து “போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக” சீரமைக்கப்படும்.
சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும்.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் இனி காவல்நிலையம் வரவேண்டியதில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.
ரூ.6.47 கோடியில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படும்.
காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயம் கடைபிடிக்கப்படும்-
சமூக ஊடகங்களை கண்காணிக்க சமூக ஊடக மையம் அமைக்கப்படும்.
திருவாரூர் முத்துப்பேட்டையில் ரூ12 கோடி செலவில் பயிற்சி காவலர்களுக்கான இல்லம் கட்டப்படும்.
சென்னையில் 3 மண்டலங்களில் போக்குவரத்து கண்காணிப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.
காவலர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் வீரர்களுக்கு இடர் படி உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
:ரூ.37.50 கோடி செலவில் புதிய நீர்தாங்கி வண்டிகள் 50 வாங்கப்படும்.
இரவு பணிக்கு செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்பு படியாக மாதந்தோறும் ரூ. 300 வழங்கப்படும்.
15 நாட்களுக்கு ஒருமுறை உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு ஒருநாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இதன் மூலம் 10,508 பேர் பயனடைவார்கள்.
இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் காவலர்கள், உயிரை மாய்ந்து கொள்ளக்கூடிய சூழல் ஏற்படுவதால், அதனை முன்கூட்டியே கண்டறிந்து களைவதற்கு காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும்.