சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று இடிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கண்ணையா என்பவர் திடீரென்று தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
கண்ணையா உயிரிழந்த விவகாரம் சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. இதுதொடர்பாக பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், கண்ணையாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள், குடியிருப்புகளை இடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம் :