தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 4வது கட்ட தனது தேர்தல் பிரசாரத்தை இன்று கொங்கு மண்டலத்தில் தொடங்கியுள்ளார். முதல் நிகழ்வாக, கோவை கிழக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். குறிப்பிட்ட சிலர், நேரிடையாகவே, தங்களது குறைகளை தெரிவித்தனர். அவர்களுக்குப் பதிலளித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், பின்னர், கூட்டத்தினரிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும்/
திமுக ஆட்சிக்கு வந்ததும், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவோம். 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய ஆகிய இரு தொகுதிகளை உள்ளடக்கிய மக்களிடம் தாராபுரத்தில் நடைபெற்று வரும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார்.