Tue. May 14th, 2024

6வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலியில் தொடங்கியது. இதில், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

விவசாயம், உட்கட்டமைப்பு, உற்பத்தி, மனித வள மேம்பாடு உள்ளிட்டவை பற்றி பிரதமர் ஆலோசனை நடத்த வருகிறார். ஜம்மு – காஸ்மெரிலிருந்து பிரிந்த லடாக் யூனியன்பிரதேசம் முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது.

தொடக்கவுரை ஆற்றிய பிரதமர் மோடி, உற்பத்தித் திறனை அதிகரிப்பதுதான் இந்தியாவின் தலையாய குறிக்கோளாக இருந்தாலும், உலகத் தேவைக்காகவும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நேரத்தை வீணடிக்காமல், உற்பத்தியை அதிகரித்து இலக்கை நோக்க வேகமாக முன்னேற வேண்டும். இதற்கு இளம்தலைமுறையினரின் பங்களிப்பு முக்கிய இடத்தை பெற வேண்டும்.

தனியார் துறை, உற்பத்தி துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. அதன் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்க, நடப்பு நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, பாராட்டுதலுக்குரியது. மேலும், வேலைவாய்ப்பை அதிகரிக்க தேவையான நிதி ஒதுக்கீடும் விரைவில் செய்யப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.