Sun. Apr 20th, 2025

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

சட்டப்பேரவையில் இரங்கல்

தமிழக சட்டசபை காலை 10 மணிக்கு தொடங்கியதும், மேகாலயாவில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒரு நிமிடம் பேரவைத் தலைவர், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.