சட்டப்பேரவையில் இன்று வருவாய் மற்றம் பேரிடர் மேலாண்மைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:
ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறோம்..
வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதே இருக்கக்கூடாது,செல்போனில் வசதிகள் கிடைக்க வேண்டும்.
சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்;
முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும்.
அம்மா திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்திலேயே நிறுத்தி விட்டார்கள்.
274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும்;10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுகோட்டை ஆகிய வட்டங்களை சீரமைத்து புதிதாக திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று வருவாய் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.