தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் பணிக்கு சேர போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்த 200க்கும் அதிகமான வட மாநிலத்தவர்களள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் படித்து பட்டம் வாங்கிய இளம் தலைமுறையினர், மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களிலோ, ரெயில்வே துறை, என்எல்சி போன்ற நிறுவனங்களிலோ வேலையில் சேர முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் பிறமாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இந்த வரிசையில், டெல்லி, உ.பி, அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தவர்கள் அதிகளவில் மத்திய அரசு வேலைவாய்ப்பில் இடம்பிடித்துள்ளார்கள்.
அஞ்சலக துறை 2016ம் ஆண்டு நடத்திய தேர்வில் வடஇந்தியர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். இவர்கள் தமிழ் பாடத்தில் 25க்கு 24 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களது தேர்ச்சி நிராகரிக்கப்பட்டது.
வடமாநிலத்தவர் மோசடி செய்து தமிழகத்தில் உள்ள மத்திய ரசு நிறுவனங்களில் சேருவதாக பல ஆண்டுகளாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழக மத்திய அரசு நிறுவனங்களில் 20க்கும் மேற்பட வடமாநிலத்தவர் போலி ஆவணங்கள் மூலம் வேலையில் சேர்ந்து உள்ளது தெரியவந்து உள்ளது.
தமிழக தேர்வுத்துறை வழங்கியது போல் போலி ஆவணம் கொடுத்து மத்திய அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்கள் சேர்ந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விசாரணை சூடுபிடித்தது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 200 பேர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து உள்ளனர். அஞ்சலக துறை,சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனக்களில் இவ்வாறு நடந்து உள்ளது.
யுபிஎஸ்சி கொடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ்கள் என அரசு தேர்வுகள் துறை உறுதி செய்து உள்ளது. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க அரசு தேர்வுகள் துறை அஞ்சலக துறைக்கு பரிந்துரை செய்து உள்ளது.
போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்து உள்ளது. உரிய விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு விரைவாக தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.