Sun. Nov 24th, 2024

சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்து, அதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு ஆளுநர் என்.ரவி, தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

தொல் திருமாவளவன் எதிர்ப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:

சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் மேதகு ஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு நன்றி. எனினும், அந்நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்கள் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்?

சனாதனக் கருத்தியலின் பரப்புநராகச் செயல்படும் ஆளுநர் அவர்கள், சமூகநீதிக் கருத்தியலைச் சிதைக்கும் வகையில்தான் ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்து நிறைவேற்றப்பட்ட அதே மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்?

எனவே, ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் சித்திரை நாளுக்கான தேநீர் விருந்து அழைப்பை விசிக புறக்கணிக்கிறது. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துகிறோம்.