Wed. May 8th, 2024

தேர்வை நாம் ஒரு பண்டிகையாக கொண்டாட தொடங்கினால், அதில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கும் என்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி தன்னம்பிக்கையூட்டினார்.

பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக கலந்துரையாடினார்.

ஆண்டுதோறும் பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வருகிறார் பிரதமர் மோடி.

அந்த வகையில் நடப்பாண்டிற்கான பொதுத்தேர்வுகள், பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, பண்டிகை காலத்தை நினைவுப்படுத்தினார்.

தேர்வை நாம் ஒரு பண்டிகையாக கொண்டாட தொடங்கினால், அதில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கும்.

தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம்.

நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டால், வெற்றி நிச்சயம்.

பாடத்தின் மீது முழு கவனம் இருந்தால் ஆன்லைனிலும் சிறப்பாக படிக்கலாம்.

பள்ளியில் அமர்ந்து ஆசிரியரை பார்த்தாலும் முழுகவனம் பாடத்தில் இல்லையென்றால் சரியாக கற்க முடியாது.

இவ்வாறு அறிவுரை கூறிய பிரதமர் மோடி, ஓசூரில் உள்ள பள்ளி ஆசிரியர் சந்திரசூடேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கும் பதில் அளித்தார்.