Fri. Nov 22nd, 2024

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போதெல்லாம் தமிழக எம்பிக்கள் கட்சி சார்ப்பற்று முக்கிய பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 9841023610

நடப்பு நாடாளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை தமிழக எம்பிக்கள் எழுப்பினர். இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் மூன்று மாதங்களுக்குள் மூடப்படும் என உறுதியளித்துள்ளார். ன

சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கட்டணமின்றி வாகனங்களை செலுத்தும் வகையில், அவர்கள் தங்கள் ஆதார் கார்டுகளை மட்டுமே காண்பித்து பயணம் செய்வதற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் உறுதிமொழியை அடுத்து தமிழகத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் 6 சுங்கச்சாவடிகள் விரைவில் மூடப்படுவதற்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் விதிகளை மீறி 6 சுங்கச்சாவடிகள் 60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள்ளாக அமைந்துள்ளது என்றும் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் எஸ். யுவராஜ் மற்றும் அச்சங்க நிர்வாகிகள், கடந்த பல ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் தொடர் எதிர்ப்பை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் உறுதி மொழி அமைந்திருக்கிறது.

எஸ்.யுவராஜ், தலைவர், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்…