அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்றம் அருகில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து வகையான நிதி ஒதுக்கீடுகளையும் விரைந்து வழங்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினார்.
ஆக, மொத்தமாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.20,860.40 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், மத்திய அரசின நிதித்துறைச் செயலாளர் டிவி சோமநாதன் இஆப ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: