Fri. Apr 11th, 2025

தமிழ் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

உணவுப் பொருட்களின் பற்றாக்குறையினாலும், விலைவாசி உயர்வினாலும் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் பட்டினியால் சாகும் நிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, ஈழத் தமிழர் நிலை குறித்து கிடைக்கும் செய்திகள் நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

ஈழத் தமிழர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்படி தலைமையமைச்சர் மோடி அவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டிக்கொண்டிருப்பதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

தமிழக அரசு மட்டுமல்ல, மக்களும் பல்வேறு கட்சிகளும் இணைந்து நின்று ஈழத் தமிழர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள், துணிமணிகள் போன்றவற்றைத் திரட்டிக் கொடுக்க முன்வருமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.