திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலம் ஆகும்,
இந்த திருக்கோவில் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டு கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக விழா நடைபெறுமா என்று சந்தேகம் பக்தர்களுக்கு இருந்தது? ,.
திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. அதனை ஏற்று, தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழாவினை கோயில் உபயதாரர் இன்றி சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளுடன் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார்,
அதனடிப்படையில் திருக்கோவில் நிர்வாகம் மாசி மாத பிரம்மோற்சவ லிழாவுக்கான ஏற்பாடுகளை முனைப்புடன் செய்துள்ளனர் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை திருக்கோயிலில் கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது,
இன்று (பிப்ரவரி-18 )காலை 8.30. மணி முதல் அளவில் மலைக் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமான் வள்ளி- தேவயானை தாயார்களுடன் எழுந்தருளினார். (11 மாதங்கள் கழித்து(கொரோனோ வைரஸ் தொற்று காலத்தில் மலைக் கோயிலில் இருந்து சுவாமி வெளியே மாடவீதியில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) மலைக்கோயில் மாட வீதியில் இந்திர விமானம் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள் ஏராளமானோர் முருகா, வேலா என முழக்கமிட்டு மனமுருக வழிபட்டனர்.
தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பூத வாகனம், யானை வாகனத்தில், புலி வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு மாடவீதியில் காட்சியளிக்கிறார் பிப்ரவரி 24-ஆம் தேதி திருக்கோயிலின் சிறப்பு மரத் தேரில் எழுந்தருளும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்,
இதேபோல் பிப்ரவரி-25 ஆம் தேதி உற்சவர் முருகப்பெருமான் நந்தி ஆற்றங்கரை அருகிலுள்ள ஆறுமுக சுவாமி கோயிலில் ஊஞ்சல் சேவை உற்சவர் முருகப்பெருமானுக்கு நடைபெறுகிறது இந்த விழாவில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது,
அதனை தொடர்ந்து அன்று மலைக் கோவிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வள்ளியம்மை மண்டபத்தில் சிறப்பு வைபவம் நடைபெறுகிறது- அன்று முழுவதும் திருத்தணி முருகன் கோயில் மலை கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்,
பிப்ரவரி 26-ஆம் தேதி முருகப்பெருமான் வள்ளி அம்மன் திருமணம் மலைக்கோவிலில் அதிகாலை 4:30 மணியிலிருந்து காலை 6.00- மணிவரை வைபவம் நடைபெற உள்ளது,
பிப்ரவரி-27 அன்று மாசி மாத பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது என்று திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர், இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திருக்கோயில் இணை ஆணையர் செயலாளர் பழனிக்குமார், திருக்கோயில் தக்கார் ஜெய்சங்கர், உதவி ஆணையர் ரமணி, மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்….
பதினோரு மாதங்கள் கழித்து உற்சவர் திருத்தணி முருகப்பெருமான் வள்ளி- தேவயானை தாயாருடன் மாடவீதியில் நாளை மறுநாள் திரு உலா வர இருக்கிறார்…
படவிளக்கம்..
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வயானை தாயாருடன் இன்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் போது எடுத்த படம் …