Sun. Nov 24th, 2024

சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை அலுவலகர்கள் மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாநாட்டை நிறைவு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் சாதி, மத மோதல்களை உருவாக்குபவர்களை அடையாளம் கண்டு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என முதல்வர் உறுதிபட கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய நிறைவு உரையின் வீடியோ இதோ…

முதல்வரின் முகவரி சேவை – திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுக்கு பாராட்டு….

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கௌரவிப்பு….

அரசு அலுவலர்களுக்கு பாராட்டு…

மூன்று நாள் மாநாட்டிலும் அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் வகையில் சிறப்பான ஆலோசனைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களின் அனைத்து ஆலோசிகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் உறுதியளித்தார். இதேபோல, பொதுமக்களுக்கான காவல் துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றின் சேவைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதனையும் முதல்வர் ஏற்றுக் கொண்டு, உரிய சட்டம் பிறப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

முதல்வரின் எளிமை…

மாநாட்டின் நிறைவில் அனைத்துத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான மதிய உணவு விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு உணவு உட்கொண்டார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் ஆகியோரும் மதிய உணவு நிகழ்வில் கலந்துகொண்டனர்.