Fri. May 17th, 2024

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பெயரில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இன்று தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் உத்தமபாளையம் தொகுதியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்?அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் பொதுமக்களில் சிலரை பேசச் சொல்லி குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு பதிலும் வழங்கினார். தொடர்ந்து அவர் நிகழ்வில் பேசியதாவது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார்

துணை முதலமைச்சர் யாருக்கும் உண்மையாக இல்லை

தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் எதையும் பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை/

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து, கம்பம் மற்றும் தேனி தொகுதிகளில் நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் பங்கேற்கிறார்.